ஐபிஎல் கிரிக்கெட்: கடைசி 2 லீக் போட்டிகளும் ஒரே நேரத்தில்
29.09.2021 16:07:58
கடைசி 2 லீக் போட்டிகளும் ஒரே நேரத்தில் நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அக்.10-ம் தேதி ஐதராபாத் - மும்பை போட்டி, பெங்களூரு - டெல்லி போட்டிகள் பிற்பகல் மற்றும் இரவில் நடைபெற இருந்தன. 2 போட்டிகளையும் ஒரே நேரத்தில் இரவு 7.30 மணிக்கு நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.