விஜய்யின் 100 நாள் ஆட்சியில் ரூ.1,02,514 கோடி முதலீடு.

13.08.2026 14:37:31

வெற்றி தமிழ்நாடு திட்டத்தின் கீழ் கடந்த 100 நாட்களில் மாநிலத்தில் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியும் புதிய வேகத்தை பெற்றுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் நூறு நாள் சாதனையாக, மொத்தம் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,02,514 கோடி மதிப்பிலான மாபெரும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

இந்த தொழில்துறை வளர்ச்சியின் வழியாக தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு 1,21,788 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தை காட்டுகிறது. மாநிலத்தில் தொடர்ந்து முதலீடுகள் அதிகரித்து வருவதால், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவு நனவாகி வருகிறது.

தமிழ்நாட்டை தொழில் துறையில் முன்னணியில் கொண்டு செல்லும் நோக்கில் அரசு மேற்கொண்டு வரும் துரிதமான நடவடிக்கைகளும், சிறப்பான கொள்கைகளும் உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்த்து வருகின்றன. 

குறுகிய காலத்தில் எட்டப்பட்டுள்ள இந்த சாதனை, மாநிலம் முழுவதும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஒரு வளர்ந்த பொருளாதாரப் பாதையில் அசுர வேகத்தில் முன்னோக்கி அழைத்துச் செல்கிறது.