ஜனநாயகன் படத்தை வெளியிட தடை!

09.01.2026 13:24:31

விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷாவின் தீர்ப்புக்கு எதிராக சென்சார் போர்டு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, மனுவில் கோரப்படாத நிவாரணத்தை தயாரிப்பு நிறுவனத்துக்கு தனி நீதிபதி அளித்துள்ளார் என தணிக்கை வாரியம் தரப்பு வாதம் வைத்துள்ளது. ஜனநாயகன் வழக்கில் தனி நீதிபதி ஆஷா உத்தரவுக்கு தடை விதித்தது தலைமை நீதிபதி அமர்வு

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்துக்கு U/A சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு முடிவு செய்திருந்தது. ஆனால் இப்படத்தில் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தணிக்கை குழு உறுப்பினர் புகார் கொடுத்தார். இதனால் ஜனநாயகன் திரைப்படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று ஜனவரி 9 ஆம் தேதி ஜனநாயகம் படம் ரிலீஸ் செய்யப்படவில்லை.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்‌ஷன்ஸ் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிடி ஆஷா, ஜனநாயகன் திரைப்படத்துக்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். ஆனால் நீதிபதி பிடி ஆஷாவின் இந்த உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு உடனடியாக மேல்முறையீடு செய்தது. சென்சார் போர்டு சார்பாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா பெஞ்ச் முன்பாக ஆஜராகி முறையிட்டார். நீதிபதி பிடி ஆஷாவின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, விசாரிப்பதாகத் தெரிவித்தார். ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவின் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்த்வா, நீதிபதி அருள் முருகன் அமர்வில் விசாரணை நடந்து வருகிறது. மனுவில் கோரப்படாத நிவாரணத்தை தயாரிப்பு நிறுவனத்துக்கு தனி நீதிபதி அளித்துள்ளார் என தணிக்கை வாரியம் தரப்பு வாதம் வைத்துள்ளது. மேலும், சென்சார் போர்டு பதில் அளிக்க கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றும் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்சார் போர்டு பதிலளிக்க அவகாசம் வழங்காமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன?" என மேல்முறையீட்டு வழக்கில் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்குமாறு நீதிபதி பி.டி.ஆஷா அளித்த உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜனநாயகன் பட வழக்கை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு.