
தமிழர்களின் சுயாட்சி கனவு: பின்வாங்கும் அநுர அரசு.
31.07.2025 07:03:51
தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலைமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு முயற்சியை எடுத்திருப்பதாக எவ்விதத்திலும் தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் பிரச்சினைகளை சமஷ்டி அடிப்படையில் தீர்ப்பதற்கான அதிகாரம் என்பது எங்களுக்குரியது.
தமிழ் மக்கள் தங்களை ஆட்சி செய்யும் ஒரு சுயாட்சி அதிகாரத்திற்காக நாங்கள் காத்திருப்பதுடன் இதற்காக அரசுக்கு பூரண ஆதரவளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
ஆனால், தற்போதைய அரசாங்கம் அணைவரையும் ஒன்றினைக்க தயார் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.