ஆடைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்-போலந்து தூதர்
ஐரோப்பா முழுவதும் ஏற்றுமதி செய்ய ஒரு ஜவுளி மையமாக போலந்து உள்ளது
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) மற்றும் இந்தியா - போலந்து வர்த்தகர் சந்திப்பு கூட்டம் ஆன்லைனில் நடந்தது.
போலந்து நாட்டு பல்பொருள் வர்த்தக நிறுவனங்களில் தங்கள் ஆயத்த ஆடைகளின் இருப்பை அதிகரிக்க இந்திய ஏற்றுமதியாளர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்திய பாரம்பரிய ஆடைகளை போலந்தில் அதிகளவு சந்தைப்படுத்த முடியும்.ஐரோப்பா முழுவதும் ஏற்றுமதி செய்ய ஒரு ஜவுளி மையமாக போலந்து உள்ளது. ஆடைகள் சரியான நிலைப்புத்தன்மையுடனும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும் என்றார்.
திருப்பூர் ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் பேசுகையில், ‘’செயற்கை இழை ஆடை, மருத்துவ ஜவுளி, டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பில் இந்திய நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் நேரடியாகவோ அல்லது கூட்டாகவோ இணைந்து உற்பத்தி பிரிவுகளை அமைக்கலாம். வெளிநாட்டு பிராண்டட் நிறுவனங்கள் இந்திய சந்தையிலும் சில்லரை ஆடை வர்த்தகத்தை விரிவுபடுத்த முடியும் என்றார்.
திருப்பூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா என நாடுமுழுவதும் உள்ள ஆடை உற்பத்தி துறையினர் புதிய ஆர்டர்களை பெறுவது குறித்து போலந்து நாட்டு வர்த்தகர்களுடன் கலந்துரையாடினர்.ஐரோப்பா முழுவதும் ஏற்றுமதி செய்ய ஒரு ஜவுளி மையமாக போலந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.