கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் பலி

24.09.2021 07:00:15

மிருக வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (23) மாலை திருப்பனே காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட முரியாகல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

60 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மூவர் குறித்த பகுதியால் நடந்து சென்ற சந்தர்பத்தில் இருவர் மீது துப்பாக்கி சுடப்பட்டுள்ளது.