இன்று முதல் திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்கு அனுமதி

10.01.2022 04:36:15

இன்று திங்கட்கிழமை  முதல் திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று முதல் ஒரு மணித்தியாலம் முதல் இரண்டு மணிநேரம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு இலங்கை மின்சார சபை கோரியதை அடுத்து உரிய அனுமதி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.