நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படலாம்
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதாரக் கொள்கை மாற்றமடைந்தால் மீண்டும் பழைய நிலைமை ஏற்படலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய வங்கியில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
நீடித்த ஸ்திரநிலை என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில் புதிய மத்திய வங்கி சட்டத்திற்கு அமைய, மத்திய வங்கி அறிவித்துள்ள முதலாவது பொருளாதார விபரிப்பு தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது.
நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டும் வழமைக்கு திரும்புவதாக மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
IMF திட்டத்துடன் இணக்கம் காணப்பட்ட இலக்குகள் என்பது அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட செயற்றிட்டம் என சுட்டிக்காட்டிய ஆளுநர், அரசாங்கம் இணங்கியுள்ள குறித்த செயற்றிட்டத்தை தற்போதைய முறையில் தொடர்ந்தால் நிலையாக பேண முடியும் என தாம் அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போதைய பொருளாதார கொள்கையில் மாற்றம் ஏற்பட்டால், மீண்டும் பழைய நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும், தற்போதைய கொள்கையை எதிர்காலத்திலும் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம் எனவும் அவர் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.