நிதி நிவாரணம் வழங்கிய சூர்யா – ஜோதிகா

02.08.2024 08:10:19

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் திகதி முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280ற்கும் அதிகமானோார் உயிரிழந்துள்ளதோடு,  மேலும் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என  அஞ்சப்படுகிறது.

 

இந்த நிலையில், பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் இந்திய மதிப்பின்படி  ரூ. 50 இலட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நிலச்சரிவின் மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் காண்போர் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது