40 தமிழக மீனவர்கள் ஜனாதிபதி கோட்டபாயவின் உத்தரவில் விடுதலை !

27.03.2021 09:00:17

 

ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் உத்தரவிற்கமைய  தமிழக மீனவர்கள் 40 பேர், விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நல்லிணக்க அடிப்படையில், குறித்த 40 மீனவர்கள் மீதும் எவ்வித வழக்குகளும் தொடராமல் விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார்.

குறித்த ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 40 பேரும் படகுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் , நேற்று (வெள்ளிக்கிழமை) ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தை  வந்தடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.