
சாய் அபயங்கரின் சித்திரபுத்திரி
03.02.2025 07:03:00
பிரபல சினிமா பாடர்களான திப்பு மற்றும் ஹரினி தம்பதியின் மகனான சாய் அபயங்கர் கடந்தாண்டு தொடக்கத்தில் ‘கட்சி சேர’ என்ற பாடலை பாடி, இசையமைத்து வெளியிட்டார். இந்த பாடல் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது.
அதைத்தொடர்ந்து சாய் அபயங்கர் ‘ஆசை கூட’ என்ற பாடலை வெளியிட்டார். இந்தப் பாடலும் இணையத்தில் மிகப் பெரிய வைரல் ஆனது.
இந்த இளம் வயதிலேயே அவர் இசையமைத்த இரு பாடல்களும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இதனால் சூர்யா 45 படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரை தேடி வந்தது.
இந்நிலையில், கட்சி சேர, ஆசை கூட வரிசையில் சாய் அபயங்கரின் 3 ஆவது இண்டிபெண்டண்ட் பாடலான ‘சித்திரபுத்திரி’ பாடலை நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்த ஆல்பத்தில் பிரபல நடிகை மீனாட்சி சவுத்ரி நடனமாடியுள்ளார்.