நிலநடுக்கம்!
05.04.2025 08:16:27
பப்புவா நியூகினியாவின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் உள்ள கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கே சாலமன் கடலுக்கு அருகில், இன்று அதிகாலை 6:04 மணியளவில் 6.9 ரிச்டர் அளவு கொண்ட பயங்கர நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந் நிலநடுக்கம் 33 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ஆழமற்ற நிலையில் ஏற்பட்டதால், அருகிலுள்ள பகுதிகளில் பலரும் அதிர்வை உணர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
19,000 மக்கள் தொகை கொண்ட கிம்பேயில் குறித்த நில அதிர்வினைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பபுவா நியூகினியாவின் புவியியல் அமைப்பு காரணமாக, இதுபோன்ற நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுகின்றமை குறிப்பிடத்கக்கது.