
நான்கு பேரை நாடுகடத்தும் ஜேர்மனி!
04.04.2025 08:01:33
அமெரிக்க ஸ்டைலில் அமெரிக்கர் உட்பட நான்குபேரை நாடுகடத்த ஜேர்மனி முடிவு செய்துள்ளது. தேசிய அபாயம் இருப்பதாக கூறி நான்கு பேரை நாடுகடத்த ஜேர்மனி அரசு முடிவு செய்துள்ளது. அவர்களில் ஒருவர் அமெரிக்கர், ஒருவர் போலந்து நாட்டவர், இருவர் அயர்லாந்து நாட்டவர்கள். |
இந்த மாதத்திற்குள் அவர்கள் நான்கு பேரும் ஜேர்மனியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதுடன், மூன்று ஆண்டுகளுக்கு ஜேர்மனிக்குள் நுழையவும் அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நான்கு பேரும் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் பங்கேற்றதற்காக நாடுகடத்தப்பட உள்ளார்கள். ஜேர்மனியைப் பொருத்தவரை, இப்படி எந்த விசாரணையும் இன்றி நாடுகடத்தும் வழக்கம் இதுவரை இல்லை என்பதால், இந்த நாடுகடத்தல் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. |