உதயநிதி படத்தை கமல்ஹாசன் தயாரிக்கின்றாரா?

27.05.2026 08:26:06

அரசியல் களத்திலிருந்து மீண்டும் சினிமா உலகிற்குத் திரும்புகிறார் திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின். 

 

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தற்போதைய புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கடந்த 2022-ஆம் ஆண்டிலேயே கமல்ஹாசன் தயாரிப்பில், 'கிடாரி' பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உதயநிதி நடிப்பதாக ஒரு படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், உதயநிதி திடீரென விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதால், தனது நடிப்பு பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அறிவித்தார். அவர் நடிப்பில் வெளியான 'மாமன்னன்' திரைப்படமே அவரது கடைசி படமாக அமைந்தது.

 

இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்ததை தொடர்ந்து, தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி, மீண்டும் கலைத்துறையில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே பாதியில் நின்ற கமல்ஹாசனின் அதே படத்திலா அல்லது முற்றிலும் புதிய கதையிலா அவர் நடிக்க போகிறார் என்பது குறித்த இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை என்றாலும்,