கொழும்பு போர்ட் சிட்டி நடைப்பாதை திறக்கப்பட்டது

10.01.2022 05:38:40

 கொழும்பு போர்ட் சிட்டியில் 500 மீற்றர் துாரத்தைக் கொண்ட பொதுமக்களுக்கான நடைப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவின் 65வது நிறைவை முன்னிட்டு இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் பங்கேற்றனர்.