உக்ரைனுக்கு உதவும் ஜேர்மனி.
உக்ரைனுக்கு புதிய AI ட்ரோன்களை ஜேர்மனி வழங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை முடிவுக்கு வராமல் தொடர்ந்து குழப்பான சூழ்நிலையில் நீடித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவின் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யாவின் உள் நகரங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்த ஜோ பைடன் அனுமதி வழங்கினார். |
இந்த அறிவிப்புக்கு ரஷ்யா கடுமையான கண்டனம் தெரிவித்ததோடு இது போரின் தன்மையை மாற்றிவிடும் என்று எச்சரிக்கை விடுக்க தூண்டியது. இந்த பதற்றமான சூழ்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த முடிவு மூன்றாம் உலக போரை தூண்டிவிடும் நிபுணர்கள் கடும் விமர்சனம் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனுக்கு பில்ட் (Bild) ரக AI ட்ரோன்களை ஜேர்மனி வழங்க உள்ளதாக தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 4000 செயற்கை நுண்ணறிவு ட்ரோன்களை Helsing என்ற ஜேர்மன் நிறுவனமானது உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. டாரஸ் என்ற புனைப்பெயர் கொண்ட இந்த ட்ரோன்கள் ரஷ்யாவின் போர் முறைகள் மற்றும் ஜிபிஎஸ்-லிருந்து தப்பிக்க கூடியது. உக்ரைனுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டதை ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். |