22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு மீண்டும் சவால்.

25.08.2026 09:05:00

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலத்துக்கு எதிராக மற்றுமொரு மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலத்துக்கு எதிராக சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் குழுவொன்றால் குறித்த மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் சில சரத்துகள் நீதித்துறையின் சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் மீறுவதாக மனுதாரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனவே, குறித்த மசோதாவை பொதுவாக்கெடுப்பு மூலம் மக்களின் அங்கீகாரத்துக்கு உட்படுத்த வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.