தமிழ்த் தலைமைகளுக்குள் ஒற்றுமை வேண்டும்
தமிழ்த் தலைமைகள் பிளவுபடாத சமூகமாக ஒன்றிணைய வேண்டும் என அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதுவலுடனான நேற்றைய சந்திப்பு தொடர்பில் கிளிநொச்சியில் அவர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக இருந்த தமிழ்கட்சிகள் பிளவு பட்டு இருக்கின்றன.
அதே போல் தமிழரசுக் கட்சிக்குள்ளும் நீதிமன்ற வழக்கு காணப்படுகிறது.
இவ்வாறு தமிழ் கட்சிகள் பிளவுபடாது ஒன்றிணையும் போதே பலமாக முடியும் என அமெரிக்க தூதுவர் தெரிவித்தார்.
தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பொலிசார் பொது மக்களை கைது செய்யும் விடயங்கள், தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன” என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலும் தெரிவித்தார்.