அவசரமாக ஆவணச் சான்றுறுதிப்படுத்த சனிக்கிழமையும் விசேட சேவை!
|
அவசரமாக ஆவணச் சான்றுறுதிப்படுத்தல் சேவையைப் பெற்றுக்கொள்ள வேண்டியவர்களின் வசதிக்காக, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு விசேட சனிக்கிழமை சேவையை வழங்கவுள்ளது. |
|
இதன்படி, எதிர்வரும் 17, 24 மற்றும் 31ஆம் திகதிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்தச் சேவை வழங்கப்படவுள்ளது. இந்தச் சேவையானது பத்தரமுல்லையில் அமைந்துள்ள தூதரக விவகாரப் பிரிவின் தலைமை அலுவலகத்தில் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது. சேவையைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் முன்கூட்டியே நேரத்தை ஒதுக்குவது கட்டாயமாகும். நேர ஒதுக்கீட்டுக்கான இணைப்பு: https://www.echannelling.com/ministry-of-foreign-affairs/H533 எனவே, அவசரமாக ஆவணச் சான்றுறுதிப்படுத்தல் சேவை தேவைப்படுவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். |