
நியூயார்க் நகரை உலுக்கிய சம்பவம்.
நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் மக்கள் கூட்டத்தின் நடுவே இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் மூவர் காயங்களுடன் தப்பியுள்ளதாக பொலிசார் உறுதி செய்துள்ளனர். நியூயார்க் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள சுற்றுலா தலத்தில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் 18 வயதுடைய ஒரு பெண்ணும், 19 மற்றும் 65 வயதுடைய இரண்டு ஆண்களும் காயமடைந்துள்ளனர். |
ஒரு தகராறை அடுத்து வன்முறை எதிர்வினையாக இந்தத் தாக்குதலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் 17 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு ஆண்களின் காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டன, அதே நேரத்தில் ஒரு பெண்ணின் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 1 மணிக்குப் பிறகு மன்ஹாட்டனில் உள்ள மேற்கு 44வது தெரு மற்றும் 7வது அவென்யூவில் பொலிசார் அழைக்கப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தின் போது திடீரென்று துப்பாக்கி சத்தம் கேட்கவும் மக்கள் கூட்டம் சிதறி ஓடியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர், மன்ஹாட்டனில் ஒரு துப்பாக்கிதாரியால் மற்றொரு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, அந்த நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார். NFL தலைமையகம் அமைந்துள்ள அலுவலகங்களில் 27 வயதான ஷேன் தமுரா என்பவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நாலவர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. |