
தேசிய விருதுகளை வென்றவர்களுக்கு சூர்யா வாழ்த்து.
71வது இந்திய தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழில் வெளியான பார்க்கிங் திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.
வாத்தி திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு வழங்கப்பட்டது.
அத்துடன் சிறந்த குணச்சித்திர நடிருக்கான விருது எம்.எஸ்.பாஸ்கருக்கும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேசிய விருதுகளை வென்றவர்களுக்கு நடிகர் சூர்யா எக்ஸ் தள பதிவொன்றில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், 71வது தேசிய திரைப்பட விருதில் சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த துணை நடிகர் பிரிவுகளில் விருதுகளை வென்ற பார்க்கிங் குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் எம்.எஸ்.பாஸ்கர் ஐயா, இயக்குனர் ராம்குமார். வாத்தி படத்தின் சிறந்த பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருதை வென்றதற்காக ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மாஸி ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். திருமதி சாட்டர்ஜியாக ராணி முகர்ஜியின் விருப்பமான நடிப்பைப் பாராட்டுகிறோம்.
உள்ளொழுக்குக்காக ஊர்வசி மேடமிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும் சூர்யா தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.