10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியசத்துணவு அமைப்பாளர்களுக்கு புதிய பதவி

08.08.2023 10:14:35

சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் தலைமையில் உணவு தயாரிக்கப்பட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு மேல் அமைப்பாளர்களாக பணிபுரிந்து வரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு புதிய பணி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. சேலம்: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் தலைமையில் உணவு தயாரிக்கப்பட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் சமூக நலத்துறை ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு மேல் அமைப்பாளர்களாக பணிபுரிந்து வரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு புதிய பணி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, சமூக நலத்துறையின் கீழ், பதிவுறு எழுத்தர் பதவியில் அவர்கள் நியமனம் செய்யப்படுவர். இதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விருப்ப கடிதம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. விருப்பக் கடிதத்துடன் உரிய படிவத்தையும் பூர்த்தி செய்து சமூக நலத்துறை ஆணையரகத்துக்கு வருகிற 10-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.