
புதிய Invisible ஆயுதத்தை உருவாக்கும் பாகிஸ்தான்!
மே 7 முதல் 10 வரை நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூரில் இந்திய வான்படையின் தாக்குதல்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் தனது பாதுகாப்பு மேலாண்மையில் புதிய நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவிடமிருந்து அதிநவீன போர்விமானங்களை வாங்குவது பற்றிய செய்திகள் முன்னதாக வெளியானாலும், இப்போது பாகிஸ்தான் முக்கிய ரகசிய திட்டத்தில் பணியாற்றிவருகிறது. இத்திட்டம் “அதிகாரபூர்வமாக தெரியாத பாதுகாப்பு வலைப்பின்னல்” (Unseen Defence Network) எனக் கூறப்படுகிறது. |
பாகிஸ்தான் பாதுகாப்பு தளமான Quwa வெளியிட்டுள்ள தகவலின்படி, இப்புதிய திட்டம் வான் பாதுகாப்பு அமைப்புகள் எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ஒளியக்கூடிய வகையில் வடிவமைக்கப்படுகிறது. இது சாதாரண fighter jet அல்லது ரேடார் அல்ல, இது sensor-பொதிந்த நவீன டேட்டா லிங்க் (TDL) அடிப்படையிலான ராணுவ தகவல் பரிமாற்ற அமைப்பாகும். இந்த வலைப்பின்னல், எதிரியின் தாக்குதலுக்கு முன்பே ஆபத்துக்களை உணர்ந்து நடவடிக்கை எடுக்க உதவும். மிகவும் குறைந்த electromagnetic களத்தில் செயல்பட கூடியதாக இது இருக்கும். பாகிஸ்தான் பாதுகாப்பு வல்லுநர்கள், இது புதிய போர் மொழியை உருவாக்கும் முயற்சி என்றும், நாட்டின் விமானப்படை மற்றும் பாதுகாப்புத் துறை இந்த மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் பெற வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளனர். |