
வரி விதிப்பால் பாதிக்கப்படும் கனேடிய நகரங்கள்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பால் இந்த ஒன்ராறியோ நகரங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றே வெளியான தரவுகளில் இருந்து தெரிய வருகிறது. கனடிய வர்த்தக சபை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், ட்ரம்பின் வரி விதிப்புகளால் தென்மேற்கு ஒன்ராறியோ முழுவதும் பல நகரங்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும். ட்ரம்பின் வரி விதிப்புக்கு இலக்காகலாம் என்ற நிலையில் இருக்கும் நகரங்களின் எண்ணிக்கையை கனடிய வர்த்தக சபை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அத்துடன் அமெரிக்க ஏற்றுமதி நம்பியிருக்கும் கனடிய நகர சபைகள் குறித்தும் பட்டியலிட்டுள்ளது. |
இதில், Saint John நகரம் முதலிடத்திலும், ஆல்பர்ட்டாவின் கால்கரி இரண்டாம் இடத்திலும் உள்ளது. ஆனால் ஒன்ராறியோ நகரங்கள் முதல் 10 இடங்களில் ஐந்தையும், முதல் 15 அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆறு எனவும் தெரிய வந்துள்ளது. கனேடிய வர்த்தக சபை கூறுகையில், எரிசக்தி ஏற்றுமதிகளே வரிகளால் அதிகம் பாதிக்கப்படும் என்று குறிப்பிடுகிறது. ஒட்டுமொத்த கனடாவில் அதிகம் பாதிக்கக் கூடிய பகுதியாக வின்ட்சர் மூன்றாவது இடத்திலும், ஒன்ராறியோவை பொறுத்தமட்டில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நகரமாகவும் உள்ளது. அதாவது ட்ரம்பின் வரி விதிப்பால் 61.7 சதவிகிதம் வின்ட்சர் பாதிக்கக் கூடும். இந்த நகரமானது ஃபோர்டு மற்றும் ஸ்டெல்லாண்டிஸிற்கான முக்கிய ஆட்டோமொடிவ் அசெம்பிளி ஆலைகளுக்கு தாயகமாக உள்ளது, மேலும் மிச்சிகனுடன் நிலையான இருவழி வர்த்தகத்தையும் கொண்டுள்ளது. விவசாய ஏற்றுமதி, வாகன பாகங்கள் உற்பத்தி காரணமாக கிச்சனரிலிருந்து வாட்டர்லூ, பிராண்ட்ஃபோர்டு மற்றும் குயெல்ப், ஒன்ராறியோ வரையிலான பகுதி நான்காவது முதல் ஆறாவது இடத்தைப் பிடித்தது. எஃகு உற்பத்தி வசதிகள் காரணமாக கனடாவில் ட்ரம்ப் வரி விதிப்புக்கு இலக்காகும் ஹாமில்டன் எட்டாவது இடத்தில் உள்ளது. கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25 சதவிகித வரி விதித்துள்ள ட்ரம்ப், எரிசக்தி ஏற்றுமதிக்கு 10 சதவிகிதம் வரி விதித்துள்ளார். ஆனால் கடைசி நேர வாக்குறுதிகளின் அடிப்படையில், மார்ச் 4ம் திகதி வரையில் அவகாசம் அளித்துள்ளார். ட்ரம்பின் வரி விதிப்பு அமுலுக்கு வரும் என்றால், இருநாடுகளுக்கும் இடையேயான 20 பில்லியன் டொலர் மதிப்பிலான எஃகு வர்த்தகம் பாதிப்புக்கு உள்ளாகும். அத்துடன் கனடாவுக்கான 40 சதவிகித எஃகு இறக்குமதி அமெரிக்காவில் இருந்தே வருகிறது. ஒன்ராறியோ கனடாவின் இரண்டாவது பெரிய முதன்மை உலோக உற்பத்தியாளராக உள்ளது, மாகாணத்தின் தொழில்துறை ஊழியர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் இரும்பு மற்றும் எஃகு உற்பத்தியில் பணிபுரிகின்றனர். மேலும், 2023 ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில், ரொறன்ரோவிலிருந்து அமெரிக்காவிற்கு 9,934 ஏற்றுமதியாளர்கள் இருப்பதாக கனடிய வர்த்தக சபை குறிப்பிடுகிறது. மட்டுமின்றி, 82 மில்லியன் டொலர் மதிப்பிலான ஏற்றுமதியும் முன்னெடுக்கப்படுகிறது. ட்ரம்ப் வரி விதிப்பால் பாதிக்கப்படக் கூடிய 15 நகரங்கள்... Saint John, N.B., 131.1 per cent Calgary, Alta., 81.6 per cent Windsor, Ont., 61.7 per cent Kitchener-Cambridge-Waterloo, Ont., 43 per cent Brantford, Ont., 27.8 per cent Guelph, Ont., 24 per cent Saguenay, Que., 23.5 per cent Hamilton, Ont., 19.8 per cent Trois-Rivieres, Que., 18.9 per cent Lethbridge, Alta., 15.7per cent Belleville-Quinte West, Ont., 14.4 per cent Drummondville, Que., 12.1 per cent Thunder Bay, Ont., 11.2 per cent Oshawa, Ont., 11 per cent Abbotsford-Mission, B.C., 7.6 per cent |