விடுதியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

11.10.2021 02:53:40

எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஹங்வெல்ல பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அருகில் இருந்து குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது

நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 70 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று மாலை முதல் குறித்த விடுதியில் தங்கியிருந்தார் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஹங்வெல்ல காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.