வினோத் குமாரின் வெண்கலப் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வட்டு எறிதலில் இந்தியாவின் வினோத் குமார் வெண்கலம் வென்ற நிலையில் அவருடைய பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. நேற்று (ஆக.,29) நடந்த வட்டு எறிதல் போட்டியில் 41 வயதான இந்திய வீரர் வினோத் குமார், எப்-52 பிரிவில் 19.91 மீ தூரம் எறிந்து மூன்றாவது இடத்துடன் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினாா். பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்ட வினோத் குமாருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்போட்டியின் முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டதுடன், வினோத் குமாரின் வெற்றியை தொழில்நுட்பக்குழு நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், இன்று (ஆக.,30) வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. எப்-52 பிரிவில் பங்கேற்க வினோத் குமார் தகுதி பெறவில்லை என தொழில்நுட்பக் குழு அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7-ல் இருந்து 6-ஆகக் குறைந்துள்ளது. முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான அவர் பணியின் போது பனிச்சரிவில் சிக்கி கால் முழுவதும் செயலிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது..