பாதுகாப்பு ஒப்பந்தம்!

21.10.2026 15:00:00

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும், தற்காப்புத் திறன்களை வலுப்படுத்தவும் துருக்கி, கட்டார், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நான்கு நாடுகளும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகத் துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கட்டார் தலைநகர் தோஹாவில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், நான்கு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், கூட்டு இராணுவப் பயிற்சிகள், பயிற்சி நடவடிக்கைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகளில் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்புத் தொழில்துறையையும் மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பு உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் கூட்டு முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்புச் சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த நான்கு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.