இலங்கையில் பயணக்கட்டுப்பாடு தொடருமா ?

17.06.2021 10:19:45

 

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு தொடருமா அல்லது நீக்கப்படுமா என்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா பணிக்குழு நாளை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை சந்தித்து தற்போதைய நிலைமையை மறுஆய்வு செய்து தீர்மானிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள், திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்பட வுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.