O/L பரீட்சைக்குப் பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்பயிற்சி வழங்கப்படும் – கல்வி அமைச்சர்

17.07.2023 17:54:12

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்காக பாடசாலைகளில் தொழிற்பயிற்சி பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்மொழிந்துள்ளார்.

ஜேர்மன் தொழிநுட்ப பயிற்சி நிறுவனத்தில் தொழிற்பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்கும் முன் மூன்று மாத காலப்பகுதியை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.

ஒரு மாணவர் A/L வகுப்பை பயில வேண்டாம் என முடிவு செய்தாலும், O/L பரீட்சைக்குப் பின்னர் ஒரு தொழிற்பயிற்சி நெறியை முடிப்பதன் மூலம் எதிர்கால வாய்ப்புகள் பற்றி சிறந்த புரிதலை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.