டோனியின் சம்பளம் குறைக்கப்பட்டு 2வது வீரராக ஆக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சி !
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டோனியின் சம்பளம் குறைக்கப்பட்டு 2வது வீரராக அவர் ஆக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்சியை கொடுத்த நிலையில் அதன் பின்னணி வெளியாகியுள்ளது.
2022 ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணியில் கேப்டன் டோனி, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
அந்த அணியின் முதன்மை தேர்வாக டோனி தான் இருப்பார் என உரிமையாளர் காசி விஸ்வநாதன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால் அவருக்கு ரூ. 16 கோடி ஊதியமாக இருக்கும் என நிர்ணயிக்கப்பட வேண்டியிருந்தது.
இந்த நிலையில் திடீர் மாற்றமாக சிஎஸ்கே அணி வெளியிட்ட அறிவிப்பில் தொடக்கமே ரசிகர்களுக்கு ஷாக்கான செய்தி காத்திருந்தது. அதாவது டோனிக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா முதன்மை வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவருக்கு ரூ.16 கோடி ஊதியம் கொடுக்கப்பட்டிருந்தது.
டோனி 2வது வீரராக தேர்வு செய்யப்பட்டு ரூ.12 கோடி மட்டுமே ஊதியம் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கான காரணம் கசிந்துள்ளது.
அதன்படி டோனிக்கு வயதாகிவிட்டதால், அடுத்தாண்டு நிச்சயம் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.