அமெரிக்காவுக்குள் நுழைய இனி கோவிட் பரிசோதனை அவசியமில்லை!

12.06.2022 09:35:07

தமது நாட்டிற்குள் வருகைத் தரும் பிற நாட்டு பிரஜைகளுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளவது அவசியமல்ல என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் அறிவித்துள்ளது.

உலகமட்டத்தில் கொரோனாவின் தீவிரம் குறைந்து வருவதையடுத்து, பல நாடுகளும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன.

இதனடிப்படையில் நாளைய தினம் முதல் இக் கட்டுப்பாடுகள் தம் நாட்டிலும் தளர்த்தப்படவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.