டி-20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு!

12.09.2021 15:22:40

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் ஓமானில் ஆரம்பமாகவுள்ள 2021 ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணி சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்த அணிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இலங்கை அணி

தசூன் சானக்க – தலைவர்
தனஞ்சய டிசில்வா – உப தலைவர்
குசல் ஜனித் பெரேரா
தினேஷ் சந்திமால்
அவிஷ்க பெர்னாண்டோ
பானுக ராஜபக்ஷ
சரித அசலங்க
வனிந்து ஹசரங்க
கமிந்து மெண்டீஸ்
சமிக கருணாரத்ன
நுவான் பிரதீப்
துஷ்மந்த சமீர
பிரவீன் ஜயவிக்ரம
லஹிரு மதுசங்க
மகீஷ் தீக்ஷனா
மேலதிக வீரர்கள்

லஹிரு குமார
பினுர பெர்னாண்டோ
அகில தனஞ்சய
புலின தரங்க