இன்று முதல் விசேட நடமாடும் தடுப்பூசி வேலைத்திட்டம்

12.08.2021 06:58:22

மேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை இன்றைய தினம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

சமூகத்தில் உள்ள வயோதிபர்கள், நோய் பாதிப்புக்களுக்கு ஆளானவர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் பலவீனமானவர்களின் நலன் கருதி இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய, முதற்கட்ட தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள உள்ளவர்கள் இலங்கை இராணுவ வைத்திய படையினருடன் தொடர்பு கொண்டு முற்பதிவினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.