தென் அமெரிக்க முனையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

22.08.2025 15:13:27

தென் அமெரிக்காவிற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையிலான டிரேக் கடல் பெருவழியில் வியாழக்கிழமை (21) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவானது.

நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

 

எனினும், இதனால் பரவலான சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், சிலிக்கு ஒரு குறுகிய கால சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சிலி கடற்கரைகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் ஆபத்தான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டது.

பின்னர், அந்த எச்சரிக்கை நீக்கப்பட்டது.

அர்ஜென்டினாவின் உஷுவாயா நகரத்திலிருந்து தென்கிழக்கே 700 கிமீ (435 மைல்) தொலைவில் 11 கிமீ (7 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 30 அதிகாலையில், ரஷ்யாவின் தூர கிழக்கில் வலிமையான நிலநடுக்கங்கம் ஒன்று தாக்கியது.

இதனால் ஜப்பான் மற்றும் அலாஸ்காவில் சுனாமி அலைகள் கரையை அடைந்தன.

மேலும் பசுபிக் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அல்லது உயரமான நிலங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.