தவெக கூட்டத்தில் விஜய்!.
நடிகர் விஜய் கடைசியாக மலேசியாவில் நடந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அதன்பின் கடந்த 37 நாட்களாக விஜய் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. எந்த தவெக கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையில்தான் ஜனநாயகன் திரைப்படம் சென்சாரில் சிக்கி இதுவரை வெளியாகவில்லை.. வருகிற 27ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளது.
ஒருபக்கம் தவெக தலைவர் விஜய் இரண்டு முறை டெல்லிக்கு சென்று கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணையில் கலந்து கொண்டார்.ஆனால் அரசியல்வாதியாக இருக்கும் விஜய் ஜனநாயகன் பிரச்சினை பற்றியும், சிபிஐ விசாரணை பற்றியும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில்தான் இன்று மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டிருக்கிறார்.. இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கியூ ஆர் கோடு அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் பணி தொடர்பாக மாநில, மாவட்ட அளவிலான செயல் வீரர்களுடன் விஜய் ஆலோசனை செய்யவிருக்கிறார். விசில் சின்னம் கிடைத்தபின் தவெக சார்பில் நடக்கும் முதல் கூட்டம் இ
வங்கி வேலை நிறுத்தம் அறிவிப்பு!.. 3 நாட்களுக்கு வங்கி சேவை பாதிக்கும்!...
இந்த விழாவில் ஜனநாயகன் ரிலீஸ் பற்றியும் சிபிஐ விசாரணை பற்றியும் விஜய் பேசுவாரா என்கிற எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு விவகாரம் பற்றியும் விஜய் இந்த கூட்டத்தில் பேச மாட்டார்.. தேர்தல் தொடர்பான விஷயத்தை மட்டுமே அவர் பேசுவார் என தவெகவினர் சொல்கிறார்கள்