எதிர்பார்ப்பு மிக்க இலங்கை அணி அறிவிப்பு !
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க இலங்கை கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இந்த அணியில், ஷிரான் பெனார்டோ, பினுர பெனார்டோ, அசித பெனார்டோ, சாமிக கருணாரத்ன, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் அறிமுக வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அத்துடன் திமுத் கருணாரத்ன அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், முன்னணி வீரர்களான அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இந்த அணியில், குசல் மெண்டிஸ் (துணைத்தலைவர்) தனுஷ்க குணதிலக்க, பெத்தும் நிஸங்க, தனஞ்சய டி சில்வா, அஷேன் பண்டார, நிரோஷன் டிக்வெல்ல, தசுன் சானக, இசுரு உதான, துஷ்மந்த சமீர, ஷிரான் பெனார்டோ, பினுர பெனார்டோ, அசித பெனார்டோ, சாமிக கருணாரத்ன, வனிந்து ஹசரங்க, அகில தனஞ்சய, லக்ஷான் சந்தகான், ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணி, பங்களாதேஷ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.