டொனால்டு ட்ரம்புடன் இணைந்து உக்ரைனுக்கான புதிய திட்டம்!

07.12.2024 09:07:32

உக்ரைன் தொடர்பில் டொனால்டு ட்ரம்ப் எடுக்கவிருக்கும் முடிவை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியும் என தாம் நம்புவதாக ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார். நாளேடு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள ஷோல்ஸ், உக்ரைனுக்கான கூட்டு கருத்துருவாக்கத்தை எங்களால் உருவாக்க முடியும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

   

மட்டுமின்றி, உக்ரேனிய மக்களுக்கு ஒரு கருத்தை தெரிவிக்காமல் எதையும் முடிவு செய்ய முடியாது என்பது எனது வழிகாட்டும் கொள்கையாக உள்ளது என்றார்.

வருங்கால அமெரிக்க ஜனாதிபதியுடன் விரிவாக இந்த விவகாரம் தொடர்பில் பேசியதாகவும் அவரது குழு டிரம்பின் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் நேரடி பரிமாற்றத்தில் இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஓலாஃப் ஷோல்ஸின் பதவியை பறிக்கும் பலம்பொருந்திய தலைவராக கருதப்படும் Friedrich Merz முன்வைத்த கோரிக்கையை ஷோல்ஸ் நிராகரித்திருந்தார்.

அதாவது ஜேர்மனியின் பலம் பொருந்திய Taurus ஏவுகணையை உக்ரைனுக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த நிலையில், அது போரை இன்னும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என ஷோல்ஸ் மறுப்பு தெரிவித்திருந்தார்.