தமிழக சபாநாயகராக அப்பாவு இன்று பதவியேற்கிறார் !

12.05.2021 10:13:55

தமிழக சட்டசபை சபாநாயகராக அப்பாவுவும், துணை சபாநாயகராக பிச்சாண்டியும் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கவுள்ளனர்.  குறித்த இருவரும் போட்டியின்று ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சட்டசபை காலை 10 மணிக்கு கூடவுள்ள நிலையில், இதன்போது சபாநாயகராக அப்பாவு தெரிவு செய்யப்பட்டுள்ளதை தற்காலிக சபாநாயகரான பிச்சாண்டி அறிவிப்பார்.

அதைத் தொடர்ந்து முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர், சபை முன்னவர் ஆகியோர் அப்பாவுவை அழைத்து சென்று, சபாநாயகர் இருக்கையில் அமரவைப்பர்.

அதன் பின்னர் அவருக்கான வாழ்த்துரைகள் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஏற்புரை நிகழ்த்துவார். பின்னர் துணை சபாநாயகராக பிச்சாண்டி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவிப்பார்.