வெள்ளத்தைச் சமாளிக்க போதிய மருந்துகள் கையிருப்பு!

30.11.2024 09:00:00

வெள்ளப் பேரிடர் ஏற்படும்போது அதைச் சமாளிக்கக்கூடிய வகையில் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

  

வெள்ளப் பேரிடர் ஒன்று ஏற்பட்டால் நிலைமைச் சமாளிக்கக்கூடிய வகையில்தான் நாம் என்றும் தயாராக இருக்கின்றோம். அண்மையில் பெய்த கனமழையால் யாழ். போதனா மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் ஒருசில சிகிச்சைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், மிக விரைவாகவே தற்போது நிலைமைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றார்.