பேயாக நடிக்கும் சன்னி லியோன்

10.11.2022 08:07:58

வடகறி என்ற படத்தில் கவர்ச்சி நடனம் ஆடிய சன்னிலியோன் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஓ மை கோஸ்ட்' என்ற பேய் படத்தின் மூலம் தமிழில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். சரித்திர பின்னணி கொண்ட கதையம்சத்தில் தயாராகி உள்ளது. இதில் ராணியாகவும், பேயாகவும் இரு தோற்றங்களில் சன்னிலியோன் வருகிறார். சதிஷ், யோகிபாபு, திலக் ரமேஷ், தர்ஷா குப்தா, சஞ்சனா ஆகியோரும் உள்ளனர். கே.வீரசக்தி, சசிகுமார் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை யுவன் இயக்கி உள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. அதில் சன்னிலியோன் பேயாக மிரட்டும் காட்சிகளும், அரண்மனையில் ராணியாக இருந்து எதிரிகளை கொன்று குவிக்கும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. நடிகர் சதீஷ் கூறும்போது, ''இந்த படத்தில் சன்னிலியோன் நடிக்கிறார் என்றதும் உடனே ஒப்புக்கொண்டேன். சன்னிலியோன் மனிதநேயம் மிக்கவர், இந்த படத்தில் பெரிய அர்பணிப்பை கொடுத்துள்ளார்" என்றார். சன்னிலியோன் கூறும்போது, ''எனக்கு ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களின் கனவை இந்த படத்தில் பார்ப்பீர்கள்" என்றார்.