சீனாவுக்கான விவசாய ஏற்றுமதி நிறுத்தம்

12.01.2022 03:57:45

கொவிட்-19 நெருக்கடி மற்றும் சீன துறைமுகங்களின் கட்டுப்பாடுகள் காரணமாக, பல வியட்நாமிய ஏற்றுமதியாளர்கள் சீனாவுக்கு தங்களது ஏற்றுமதிகளை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சீன துறைமுகங்களில் நெரிசலுக்கு தீர்வு காணுதல் மற்றும் வியட்நாம் ஏற்றுமதியாளர்களுக்கு தனிப்பயன் அனுமதி வழங்குதல் என்பன வியட்நாம் நாட்டினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே சீன தரப்பால் உரிய தீர்வு வழங்கும் வரை ஏற்றுமதிகளை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

2022 முதல் சீன அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. சீனாவின் கொவிட் -19 தடுப்பு விதிகளின் கீழ் அனுமதியின் தாமதமான வேகம் காரணமாக, நாட்டின் துறைமுகங்களின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வியட்னாமிய ஏற்றுமதிளாயர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வியட்நாம் பழம் மற்றும் காய்கறி சங்கத்தின் அறிவிப்பின்படி, சமீபத்திய வாரங்களில் சீனாவுக்கான கடல்சார் ஏற்றுமதி மிகவும் மந்தமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.