"கோட்" வசூலை முந்திய அஜித்!

12.04.2025 00:10:23

குட் பேட் அக்லீ படம் மிகப்பெரிய ஓப்பனிங் பெற்று அஜித் கெரியரிலேயே அதிகபட்ச வசூலை முதல் நாளில் பெற்று இருக்கிறது. அஜித் ரசிகர்கள் படத்தை வெறித்தனமாக கொண்டாடி வரும் நிலையில், தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது படம்.

இந்நிலையில் தற்போது குட் பேட் அக்லீ தயாரிப்பாளர் முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். தமிழ்நாட்டில் முதல் நாளில் 30.9 கோடி ரூபாய் வசூலித்து அஜித் கெரியரிலேயே புது சாதனையை படைத்து இருக்கிறது.

விஜய்யின் GOAT படம் 30.5 கோடி முதல் நாளில் வசூலித்து இருந்தது, அதை தற்போது குட் பேட் அக்லீ முந்தி சாதனை படைத்து இருக்கிறது.திரைப்படம் டிக்கெட் முன்பதிவு

இருப்பினும் விஜய்யின் லியோ, பீஸ்ட் ஆகிய படங்கள் தான் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. குட் பேட் அக்லீ மூன்றாவது இடம் மட்டுமே பிடித்து இருக்கிறது.