புதிய தீர்மானத்தில் பழைய சரத்துக்கள்

06.10.2022 09:43:10

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொடர்பான பொருத்தமான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா உள்ளிட்ட பல நாடுகளின் முன்முயற்சியில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டதுடன், குறித்த பிரேரணை இதுவரை சுமார் 30 நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 51ஆவது மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று  நடைபெறவுள்ளது.

புதிய தீர்மானத்தில் பழைய சரத்துக்கள்

சிறிலங்கா தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்தில், முன்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விடயங்கள் மற்றும் பல சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவச் செல்வாக்கு அதிகரிப்பு, அரசாங்க நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமை, பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை வழங்கப்படாமை போன்ற விடயங்கள் குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் ஒப்பந்தத்தை குறித்த பிரேரணையை வரவேற்றுள்ளதுடன், நாட்டின் மனித உரிமைகள் நிலைமையில் ஊழல் மிகுந்த பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என அந்தப் பிரேரணையை சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய திருத்தத்திலும் மக்கள் கைது

 

அமைதியான போராட்டங்கள் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்த உதவுவதாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் சேர்க்கப்பட்டாலும் அதன் கீழ் மக்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அந்தப் பிரேரணை மேலும் கூறியுள்ளது.

இது தொடர்பான பிரேரணை தொடர்பில் கருத்துக்கணிப்பு கோரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

எனினும் இந்த பிரேரணையை சிறிலங்காவால் தோற்கடிக்க முடியாது எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.