காரைக்குடி முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் காலமானார்!
|
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் இன்று காலமானார். இரண்டு முறை காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏவாக பணியாற்றியவர் சுந்தரம். காரில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் சுந்தரம். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டசபை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுந்தரம் இன்று எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். |
|
இவர் 1996 - 2001 மற்றும் 2006 - 2011 ஆகிய காலகட்டங்களில் காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றியவர் சுந்தரம். இன்று காலை வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது காரில் இருந்து கீழே இறங்கும்போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் காலமானது காங்கிரஸ் தொண்டர்களிடையேயும் காரைக்குடி மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து காரைக்குடி தொகுதியின் வளர்ச்சிக்கு வித்திட்ட அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். |