
ஜேர்மனியில் மக்கள் கூட்டத்திற்குள் பாய்ந்த கார்.
ஜேர்மனியின் தென்மேற்கு நகரமான ஸ்டுட்கார்டில் ஏற்பட்ட திடீர் சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகரின் மையப் பகுதியில் உள்ள மேல் நிலை மெட்ரோ நிலையத்தில், ஒரு கார் நடமாடும் மக்களுக்குள் மோதியது. இதில் மூன்று பேர் காயமடைந்தனர், இதில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெர்சிடீஸ் காரை ஓட்டி வந்த நபரை சம்பவ இடத்திலேயே பொலிஸார் கைது செய்தனர். |
இச்சம்பவம் பயங்கரவாத தாக்குதலா என சந்தேகங்கள் எழுந்த நிலையில், ஸ்டுட்கார்ட்டு பொலிஸார் தங்கள் சமூக வலைத்தளப் பதிவில், இது ஒரு “துரதிருஷ்டவசமான சாலை விபத்து” என்றும், தாக்குதலுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறியுள்ளனர். சம்பவ இடம் முழுவதும் பொலிசாரால் சோதனைக்காக முடக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு உதவுவதற்காக சாட்சியங்கள் பதிவெடுக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மெட்ரோ சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் எடுத்த புகைப்படங்களில், மருத்துவக் கையுறை, போர்வைகள் மற்றும் பைகள் சிதறியபடி காணப்படுகின்றன. இது சம்பவத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது. இந்த சம்பவம் ஸ்டுட்கார்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், நகரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுக்கொள்ளப்பட்டுள்ளன. |