
நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இன்று முடிவு!
19.08.2025 08:52:14
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் தமது கருத்தை தெரிவிக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். |
எனினும், கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடலோ, பாராளுமன்ற விவகாரக் குழுவை அழைக்காமலோ, சபாநாயகர் தன்னிச்சையாக முடிவு எடுத்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. பாராளுமன்ற மரபுகளை மதிக்காமல் சபாநாயகர் செயல்பட்டால், அவர் மீதும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர எதிர்க்கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். |