மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

30.07.2021 14:02:50

'டெல்டா வகை கொரோனா வைரசால், மத்திய கிழக்கு நாடுகளில் 4வது அலை உருவாகியுள்ளது' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு இன்று (ஜூலை 30) தெரிவித்து உள்ளதாவது:அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முகக் கவசம் அணிவதோடு, தனிமனித இடைவெளியை பின்பற்றவில்லை என்றால் அடுத்தடுத்த அலை உருவாகும் என, ஏற்கனவே எச்சரித்திருந்தோம்.


இந்நிலையில் தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்ட தீவிரமாக பரவக்கூடிய தன்மை கொண்ட டெல்டா வகை வைரஸ், 22 மத்திய கிழக்கு நாடுகளில் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக, மொரோக்கோ தொடங்கி பாகிஸ்தான் வரை பரவியுள்ளது. இப்பகுதிகளில் 4வது அலை பரவி வருகிறது. பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.