கடினக்காகித சவப்பெட்டியின் விலை என்ன?
02.09.2021 09:42:09
கொரோனா வைரஸினால் உயிரிழக்கின்றவர்களின் உடல்களை எரிப்பதற்கு மற்றும் அடக்கம் செய்வதற்காக இலங்கையில் காட் போட் என்கின்ற கடினத்தன்மை வாய்ந்த காகிதத்தினால் தயாரிக்கப்பட்ட பெட்டிகள் உலகப் பிரசித்தமாகியிருக்கின்றன.
இந்நிலையில் இதன் விலை குறித்த தகவல் இன்று வெளியாகியுள்ளது.
அதிகமாக கோவிட் மரணங்கள் ஏற்பட்டதால் தெஹிவளை – கல்கிசை மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினரான பியந்த சஹபந்துவின் ஆலோசனையின் பேரில் இந்த கடினக் காகித சவப்பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் அதிபகட்ச விலை இரண்டாயிரம் ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.