தேசிய கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பவளவிழா நிகழ்வு- புதுவை இரத்தினதுரையை கொண்டாடிய கலைஞர்கள் !

04.12.2023 16:05:00

தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பவளவிழா நிகழ்வு நேற்றையதினம் (03/12/2023) ஜேர்மன் டோட்மூன்ட் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

குறித்த நிகழ்வானது, பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகியது.

அதனை தொடர்ந்து ஐரோப்பிய தமிழ் வானொலியின் இயக்குநர் மற்றும் அகரம் சஞ்சிகையின் ஆசிரியர் இரவீந்திரன் தலைமையில் புதுவை இரத்தினதுரையின் பாடல்கள், கவிதைகள் பற்றிய உரைகள் தொடர்ந்தன.

பின்னர், ஏலையா முருகதாசன், நேசக்கரம் சாந்தி (நேசக்கரம் மீடியா) பன்னாட்டு புலம்பெயர் படைப்பாளர் சங்கத் தலைவர் சபேசன் மற்றும் பாடகர் செங்கதிர், துளசிச் செல்வன், முல்லை மோகன் போன்றவர்கள் உரையாற்றினார்கள்.

அதுமட்டுமல்லாமல், இசைப் பறவை கரோலின், ஐவரி அகஸ்ரின் மற்றும் ஜெயன் ஆகியோர் புதுவை இரத்தினதுரையின் பாடல்களையும் பாடினார்கள்.

மேலும் புதுவை இரத்தினதுரை பற்றி உரை நிகழ்த்திய துளசிச் செல்வன் கூறுகையில், இதுவரை தாயகக் கவிஞராக கொண்டாடப்பட்ட புதுவை இரத்தினதுரை அவர்களைத் தேசியக் கவிஞராக மதிப்பளித்து கொண்டாடவேண்டுமென

குறித்த கருத்திற்கு கவிஞர்கள், கலைஞர்கள்,அறிவாளிகள் நிறைந்திருந்த அரங்கம் கைகள் தட்டி ஆரவாரத்துடன் ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் தொடர்ந்த நிகழ்சியில் புதுவை இரத்தினதுரை தேசியக் கவிஞர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

தேசிய கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பவளவிழா நிகழ்வு(படங்கள்) | National Poet Puduvai Ratnathurai S Coral Festival

அதனை தொடர்ந்து அரங்கில் அனைவரது கருத்துக்களுக்கும் நேரமளித்த பின்னர் பன்னாட்டு புலம்பெயர் படைப்பாளர் சங்கத் தலைவர் சபேசன் புதுவை இரத்தினதுரையை தேசியக் கவிஞராக இந்த மன்றம் அறிவிக்கின்றது என்றும் அவரது படைப்புகள் எங்கும் பரவி தலைமுறை கடந்து வாழவேண்டுமென்றும் தெரிவித்தார்.

அதற்கு துளசிச் செல்வன், அவர் எமது தேசியப்பாடல்களை எழுதியமையால் ஏற்கனவே அவர் தேசியக் கவிஞராகவேயிருந்தார். அவரை அவ்வாறு அழைப்பது காலக் கடமையென்றார்.

அதன் போது, மன்றத்தில் இருந்தவர்கள் அவற்றை முழுமனதாக ஏற்று புதுவை இரத்தினதுரையை கொண்டாடினார்கள்.