உயர் அலைகள் குறித்து எச்சரிக்கை.

19.08.2026 15:27:13

புத்தளம் முதல் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் உயர் அலைகள் குறித்து வானிலை ஆய்வு மையம் 'அம்பர்' எச்சரிக்கையை விடுத்துள்ளது.

 

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, புத்தளம் முதல் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் 2.5 மீற்றர் முதல் 3.0 மீற்றர் வரை உயரமான பேரலைகள் (சுழல் அலைகள்) அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக, பேருவலை முதல் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரப் பிராந்தியங்களில் பேரலைகள் காரணமாக கடல் நீர் கொந்தளிப்பு அல்லது கடல் சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

 

இதற்கமைய, மேற்கூறிய கடற்பகுதிகளில் கடற்தொழில் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்தொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.